காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பில் ஆளுநரின் அறிக்கை - Lanka News Web (LNW)

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்பில் ஆளுநரின் அறிக்கை

தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் 'காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை' என்ற செய்தி தொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர்.

ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை கௌரவ ஆளுநர் அவர்கள் ஒதுக்கியிருந்ததுடன் அதற்காக யாழ்ப்பாணத்திற்கு கௌரவ ஆளுநர் வருகை தந்திருந்தார்.

முதலில் அவர்கள் ஆளுநரை சந்திப்பதற்கு வருவதாக உறுதிப்படுத்திய போதிலும் இறுதி நேரத்திலேயே வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தாம் ஆளுநரை சந்திக்க வரவில்லையென அறிவித்திருந்தனர். இதன் காரணமாக ஆளுநரால் அவர்களை சந்திக்க முடியவில்லை என்பதோடு அவர்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொள்ள முடியவில்லை.

இதேவேளை யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகளை ஏற்கனவே மூன்று முறை சந்தித்துள்ள கௌரவ ஆளுநர் அவர்கள், அவர்களுடைய கோரிக்கைகள் வேண்டுகோள்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றார் என்பதுடன் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

பிணை முறி கைது : ஐவரும் விளக்கமறியலில்

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பிணை முறி விவகாரம் : கைதானவர்களில் ஒருவர் அமெரிக்கப் பிரஜை

மார்ச் 25, 2019

மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள்...

பக்கசார்பின்றி பணியாற்றுவோம் என்கிறார் FCID பொறுப்பதிகாரி

மார்ச் 25, 2019

நிதி மோசடி விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் இருந்த புத்தர் சிலையை அகற்றுமாறு புதிதாக...

ரத்கம கொலை : பொலிஸ் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல்

மார்ச் 25, 2019

ரத்கம, பூஸ்ஸ பிரதேசத்தில் வர்த்தகர் இருவரைக் கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பாக...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

நடுவீதியில் பெண்ணை இழிவுபடுத்திய கலகா இளைஞன் கைது

மார்ச் 20, 2019

கடந்த 15ஆம் திகதியன்று கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம்...

கொலை செய்ய மறுத்த DIGஇற்கு பழிவாங்கல் இடமாற்றம்

மார்ச் 22, 2019

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நெவில் சில்வாவை, கொழும்பு பிராந்தியப் பிரதி...

ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சனை பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்வு

மார்ச் 22, 2019

அன்மையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் உத்தியோகஸ்த்தர்கள் சிற்றூழியர்கள் காரியாலத்தில் மதுபாவனை பாவித்தாக ஏற்பட்ட...

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்னேறிய இலங்கை

மார்ச் 21, 2019

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை இவ்வருடம் 130 ஆவது இடத்தில் உள்ளது.