கேக் இனிப்பு பண்டங்களை உண்ணாதீர்கள்- எச்சரிக்கை

கேக் இனிப்பு பண்டங்களை உண்ணாதீர்கள்- எச்சரிக்கை

10 April 2019 11:00 am

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

வெப்பம் அதிகரிப்பதனால் அதிக நீரை பருகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சூரிய ஒளித்தாக்கத்தை கொண்ட கேக் மற்றும் இனிப்பு பண்டங்கள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சங்கத்தின் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக தெரிவிக்கையில் சூரிய ஒளியின் தாக்கத்தின் காரணமாக இந்த உணவு பொருட்களில் உள்ள இரசாயனங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இதனால் இதன் தரத்துக்கும் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக எப்பொழுதும் பாதுகாப்பான முறைக்கு உட்பட்ட வகையில் உணவை மாத்திரம் பயன்படுத்துமாறு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.