கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக தடுப்பூசிகள் கொள்வனவு

கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக தடுப்பூசிகள் கொள்வனவு

11 April 2019 07:45 am

நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாம் இடத்தில் பெருமளவில் காணப்படும் புற்றுநோய் வகையாக கர்ப்பப்பை புற்றுநோய் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

எதிர்க்காலத்தில் கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்காக பெபிலோமா வைரசு (Papilliomavirus) தடுப்பூசியை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான 400000 Vials of single dose Quadrivalent Human Papilliomavirus Recombinant Vaccine used to prevent Cervical Cancers கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியற் பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 1.98 மில்லியன் அமெரிக்க டொலர்களை யுனிசெப்பிடம் வழங்குவதற்காக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்திய துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.