கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை அரசியல்வாதிகள் எடுக்ககூடாது - Lanka News Web (LNW)

கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை அரசியல்வாதிகள் எடுக்ககூடாது

நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்காது அதனை நாட்டின் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிள்ளைகள் எதிர்கால உலகினை வெற்றிகொள்ளத்தக்க வகையிலும் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமான தேசிய திட்டமொன்றினை விரைவில் நாட்டில் அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதோடு, அது தொடர்பிலான உரையாடலொன்றினை அரசியல்வாதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிள்ளைகளின் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் இலக்குடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டித்தன்மை எமது நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததல்ல என்பதோடு, இந்நிலைமை பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி விரைவில் மாற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் போன்ற எண்ணக்கருக்களால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளதோடு, முறையான கல்வித்திட்டத்தின் ஊடாக சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சம கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆசிரியர்களின் பிரச்சினைகள் காரணமாக கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையான கொள்கையொன்றின் உருவாக்கம் தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

பிரபல பாடசாலைகள் எண்ணக்கருவினால் பெருமளவிலான மாணவர்கள் கொழும்பு நகர பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவதனால் கொழும்பு நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி இல்லாதுபோகும் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளதையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கல்வியில் ஏற்பட்டுள்ள போட்டித்தன்மை காரணமாக ஒரு பாடசாலைக்கு அதிகளவிலான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவதனால் கல்வித்தரம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்புவதில் ஏற்படும் சவால்களையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்து, அதற்காக முன்வைக்கப்படும் மாற்று செயற்திட்டம் தொடர்பில் இதன்போது கல்வியியலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்வித்துறைசார் நிபுணர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

எங்களின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் என்கிறார் மகிந்த

ஏப்ரல் 20, 2019

ஜனாதிபதித் தேர்தலல், தங்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என எதிர்க்கட்சித்...

சஜித் - ரவி முரண்பாடு அவர்களது தனிப்பட்ட பிரச்சினை : ஐ.தே.க உறுப்பினர்கள்

ஏப்ரல் 20, 2019

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் உப தலைவர்...

கோதாபய தேர்தலில் போட்டியிடுவார் என்ற அச்சத்தில் வழக்கு போடுகின்றனர்

ஏப்ரல் 20, 2019

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் - மக்கள் எச்சரிக்கை

ஏப்ரல் 20, 2019

அடுத்த சில நாட்களுக்கு தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன்...

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb

பிரபலமான செய்திகள்

சித்திரா பௌர்ணமி

ஏப்ரல் 19, 2019

உலகளாவிய ரீதியில் இன்றைய தினம் இந்துக்களால் சித்ரா பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்றொரு ஆட்சிக்கவிழ்ப்பிற்கு துணைபோகும் முஸ்லிம் கட்சிகள்?

ஏப்ரல் 15, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மற்றுமொரு ஆட்சிக்கவிழ்ப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

இலங்கையில் திருடுபவர்களைவிட திருடரைப் பிடிப்போருக்கு நல்ல வருமானமாம்!

ஏப்ரல் 15, 2019

தற்போது இலங்கையில் மிகவும் இலாபமான வியாபாரம் திருடுவது அல்ல எனவும், அந்தத் திருடர்களைப்...

கட்சி தாவல்களினால் அதிரப்போகும் கொழும்பு அரசியல்!

ஏப்ரல் 15, 2019

பிரதான அரசியல் கட்சிகளிலிருந்து கட்சி தாவல்கள் இடம்பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தகவல்கள்...