ஜனாதிபதியிடமிருந்த அரச அச்சகம் கயந்தவின் கீழ்

ஜனாதிபதியிடமிருந்த அரச அச்சகம் கயந்தவின் கீழ்

13 April 2019 03:57 pm
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த அரச அச்சகத் திணைக்களம், காணி மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கயந்த கருணாதிலக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபத மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இயங்கிவந்த அரச அச்சகத் திணைக்களம் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முன்னர், அரச அச்சக திணைக்களத்தை ஜனாதிபதி தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எனினும், 55 நாட்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை ஏற்றபோதும், அரச அச்சகத் திணைக்களம் இதுவரை ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழேயே இருந்துவந்தது.