கோதாபய வருவதை நாமும் விரும்புகிறோம் : எமக்கு வெல்வது இலகுவாகிவிடும் : ராஜித்த

கோதாபய வருவதை நாமும் விரும்புகிறோம் : எமக்கு வெல்வது இலகுவாகிவிடும் : ராஜித்த

14 April 2019 02:44 am
எதிர்தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய ராஜபக்ச போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு என சுகாதார அமைச்ச் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்தரப்பில் கோதாபய ராஜபக்ச வேட்பாளராக களமிறங்குவாராயின், தமது தரப்பு இலகுவாக வெற்றியடையும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

''வடக்கு கிழக்கில் கோதாபயவிற்கு ஒரு வாக்குக் கூட கிடைக்கப் போவதில்லை. அவர் நூற்றுக்கு பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும் போது, நாம் நூற்றுக்கு 30இல் இருந்து ஆரம்பிப்போம். நகர சபை உறுப்பினராகக் கூட பதவி வகிக்காத, ஒருவரை இந்தத் தேர்தலில் களமிறக்கும்பட்சத்தில் அதுகுறித்து பேசுவதற்கு எமக்கு ஒன்றும் இல்லை'' என்று அமைச்சர் ராஜித்த மேலும் தெரிவித்தார்.

கோதாபய ராஜபக்ச குறித்து நேற்று முன்தினம் (12) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.