மதூஷூடன் கைதான மேலும் இருவர் இலங்கைக்கு
Tuesday, 26 May 2020

மதூஷூடன் கைதான மேலும் இருவர் இலங்கைக்கு

18 April 2019 03:24 am

பிரபல பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை நேற்று அதிகாலை மாகந்துரே மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில் அறுவர் நாடுகடத்தப்பட்டிருந்ததோடுஇ குறித்த 6 சந்தேகநபர்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த 6 பேர் தொடர்பாக தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களிடம், குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.