மனைவி, மகன், சகோதர்களே மொட்டின் வேட்பாளரை முடிவு செய்கின்றனர்
Wednesday, 27 May 2020

மனைவி, மகன், சகோதர்களே மொட்டின் வேட்பாளரை முடிவு செய்கின்றனர்

18 April 2019 04:29 am

ராஜபக்ச தரப்பில் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியை கணவன், மனைவி, மகன், சகோதர்கள் இணைந்த குடும்பமே தீர்மானிப்பதாகவும், இது குடும்ப ஆதிக்க அரசியல் எனவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், தமது கட்சியில் இவ்வாறானா முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடி, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனக் குறிப்பிட்டார்.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதால், அவரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என தான் எதிர்பார்ரப்பதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.