சஜித்தை புறக்கணிக்கும் ரணில்
Tuesday, 26 May 2020

சஜித்தை புறக்கணிக்கும் ரணில்

18 April 2019 11:02 am

அமைச்சர் சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க புறக்கணிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு விடுத்த கோரிக்கையைப் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச அவரது தந்தையான ரணசிங்க பிரேமதாசவின் தொகுதியில் இருந்து களமிறங்க ஆவல்கொண்டே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறார் அமைச்சர் சஜித் பிரேமதாச.

இந்த நிலையில் குறித்த கோரிக்கையினால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம் என ரணில் விக்ரமசிங்க இதனை நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்கமைய அமைச்சர் சஜித் பிரேமதாசவை அம்பாந்தோட்டையில் இருந்தே தனது பணிகளைச் செய்யுமாறு ரணில் தெரிவித்துள்ளார்.