முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற இலங்கை "ராவணா-1"

முதன் முதலாக விண்வெளிக்கு சென்ற இலங்கை "ராவணா-1"

18 April 2019 02:56 pm

இலங்கைக்காக முதல் முறையாக விண்வெளிக்கு "ராவணா-1" செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஆதர் சி கிளார்க் மத்திய நிலைய நிலையத்தின் பொறியலாளர்களான தரிந்து தயாரத்ன மற்றும் துலானி சாமிகா ஆகிய இருவர் இணைந்து நிர்மாணித்த குறித்த செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.18 மணிக்கு அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராவணா - 1 செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே மாத இறுதியில் அல்லது ஜுன் மாத ஆரம்பத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

Raavana 1

குறித்த செய்மதியானது, 1000 கனசென்றிமீற்றர் நீளமும் 1.05 கிலோ கிராம் நிறையும் கொண்டதாகும்.

இவ்வாறு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், செக்கனுக்கு 7.6 கிலோமீற்றர் வேகத்தில் நாளொன்றுக்கு 15 தடவைகள் பூமியை சுற்றி வரவுள்ளது.

"ராவணா-1" செய்மதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைய ஒன்றரை நாள் எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.