சவுதி அரேபியாவிடம் இருந்து 19 கோடி ரூபா கடன்
Tuesday, 26 May 2020

சவுதி அரேபியாவிடம் இருந்து 19 கோடி ரூபா கடன்

19 April 2019 05:35 am

சவுதி அரேபியா அரசாங்கம் 19 கோடி ரூபா நிதியை கடனாக வழங்கவுள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைப்பதற்காக சவுதி அரேபியா 19 கோடி ரூபா நிதியை கடனாக வழங்கவுள்ளது.

சவுதி அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறும் உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையிலான குழுவினர் அண்மையில் சவுதி சென்றிருந்தனர்.

நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இரசாயன உபகரணங்கள் உட்பட தேவையான நவீன உபகரணங்களும் மருத்துவபீடத்திற்கு வழங்கப்படவுள்ளன.

நாட்டின் மருத்துவக் கல்வியை விரிவாக்குவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள பிரதான திட்டமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.