விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Tuesday, 26 May 2020

விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

19 April 2019 09:00 am

இந்த வருடத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

பட்டாசு வகைகளை பயன்படுத்துவதால் நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது.

கடந்த வருத்தத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் றை கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பட்டாசு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்தார். இந்த வருடம் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.