எங்களின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் என்கிறார் மகிந்த
Monday, 25 May 2020

எங்களின் வேட்பாளர் வெல்வது நிச்சயம் என்கிறார் மகிந்த

20 April 2019 05:42 am

ஜனாதிபதித் தேர்தலல், தங்கள் தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றிபெறுவது நிச்சயம் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று (19) மதியம் செய்தியாளர்களிடம் பேசும் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மக்கள் புத்திசாலித்தனமாக தீர்மானத்தை எடுப்பார்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

''ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அண்மையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்ந்தும் நடந்து வருகிறது. எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் மக்கள் புத்திசாலித்தனமாக தீர்மானத்தை எடுப்பார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாமல் போனது. எனது ஆட்சிக்காலத்தில் கேட்ட தொகை அப்படியே வழங்கப்பட்டது. அத்துடன் நுவரெலியா வைத்தியசாலையை அரசாங்கத்தினால், இன்னும் திறக்க முடியவில்லை. நான்கு ஆண்டுகள் என்பது மிகப் பெரிய காலம். நான் நிர்மாணித்து கொடுத்த பின்னர், அதனை திறக்க தற்போதைய அரசாங்கத்தினால் முடியவில்லை'' என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
 
 

mahinda 01

mahinda 02

mahinda 03

mahinda 04

mahinda 05

mahinda 06

mahinda 07

mahinda 08

mahinda09