பிற்பகலில் இடியுடன் கூடிய மழை - Lanka News Web (LNW)

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

தெற்கு மற்றும் மேற்கு கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

பலப்பிட்டியிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

சமீபத்திய செய்திகள்

மே 19, 2019

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்…

மே 19, 2019

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே,…

மே 19, 2019

எமி ஜாக்சன் photo Gallery

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை - மஹிந்த

மே 19, 2019

இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது போர்க் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை...

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

மே 19, 2019

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்...

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

மே 19, 2019

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா...

எமி ஜாக்சன் photo Gallery

மே 19, 2019

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb