மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
Wednesday, 27 May 2020

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

21 April 2019 07:26 am

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இன்று கைச்சாத்திடுவதாக மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபையின் பதவி காலம் மட்டுமே நீடித்துள்ள போதிலும் ஊவா மாகாண சபை இவ்வருடம் அக்டோபர் 3 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு, வடமேல், மத்திய, வட மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களில் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை காரணமாக குறித்த மாகாணங்கள் தற்பொழுது ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.

இவற்றுள் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் 2017 ஆம் ஆண்டுடன் வடக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் 2018 ஆம் ஆண்டு தென் மாகாணம் 2019ஆம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ளன.

கிழக்கு மாகாணம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதியுடனும், வடமத்திய மாகாணம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியுடனும், சபரகமுவ மாகாணம் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதியுடனும் முடிவுக்கு வந்தன.

வடமாகாணம் 2018 அக்டோபர் 24 ஆம் திகதியுடனும், வடமேல் மாகாணம் 2018 அக்டோபர் 10 ஆம் திகதியுடனும், மத்திய மாகாணம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதியுடனும், பதவிக்காலம் முடிவடைந்தது.

இதேவேளை தென் மாகாண சபையின் பதவிக்காலம் கடந்த 10 ஆம் திகதி முடிவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.