அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

21 April 2019 06:50 am

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாக பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு ,நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தேவாலயங்களிலும், கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமையினாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.