பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு
Wednesday, 27 May 2020

பல்கலைக்கழகங்களுக்கு பூட்டு

21 April 2019 11:29 am

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அனைத்து பல்கலைக்கழகங்களும் இன்று முதல் மூடப்படுகிறது.

மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.

இதேவேளை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் அங்கேயே தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.