190ற்கும் அதிகமானோர் பலி
Wednesday, 27 May 2020

190ற்கும் அதிகமானோர் பலி

21 April 2019 11:49 am

இலங்கையில் சில இடங்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 190ற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தினால் 469 பேர் காயமடைந்துள்ளனர்.

தெமட்டகொடையில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தினால் பலியானவர்கள் தொடர்பாக இன்று நண்பகலில் தகவல் வெளியாகியது.

இதேவேளை தெமட்டகொடையில் இரண்டு நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.