ஆளுநரின் அனுதாப செய்தி
Tuesday, 26 May 2020

ஆளுநரின் அனுதாப செய்தி

21 April 2019 12:30 pm

இன்றைய விசேட நாளில் இலங்கையின் மதத்தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் நிகழ்த்தப்பட்ட மிகமோசமான வன்முறை தாக்குதல்களை அறிந்து என்னுடன் இணைந்து வடமாகாணத்தில் வசிக்கும் 1.3 மில்லியன் மக்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையுமடைகின்றோம்.

மத, ஏனைய வேற்றுமைகளைக் கடந்து எல்லா இலங்கையரும் எல்லாவிதமான வன்முறைகளுக்கும் எதிராக ஒன்றாக அணி திரளவேண்டிய நேரமிது. 


அண்மையில் நாங்கள் கஸ்டத்துடன் அடைந்துகொண்ட சமாதானத்தை இழந்துவிட முடியாது. மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுடனும் கௌரவ பிரதமர் அவர்களுடனும் எல்லா அரசியல் தலைமைத்துவங்களுடனும் இணைந்து நாட்டின் சட்டம் ஒழுங்கையும் மனித உயிர்களையும் அதன் தன்மானத்தையும் காப்பதற்காக நான் திடமாக கைகோர்த்துக் கொள்கிறேன்.

எந்தவிதமான வன்முறைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதுடன் அனைத்து இலங்கையரும் அவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக ஒன்றுபடுவோம்

இன்றைய துன்பகரமான சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எனது அழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.