அமித்தை கைது செய்தது ஏன்?

அமித்தை கைது செய்தது ஏன்?

14 May 2019 08:09 am

மகசோன் பலகாய இயக்கத்தின் தலைவரான அமித் வீரசிங்க இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் வீரசிங்க, கடந்த காலங்களில் கண்டி, திகனை பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைதாகி சில மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று (13) மற்றும் நேற்று முன்தினம் (12) இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டதன் காரணமாக ஊழல் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளராக இருந்த நாமல் குமாரவும் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 KK