எனக்கும் கூச்சலிட்டு நீர் ஊற்றிவிட்டார்கள்- கவலையில் தயா
Monday, 25 May 2020

எனக்கும் கூச்சலிட்டு நீர் ஊற்றிவிட்டார்கள்- கவலையில் தயா

15 May 2019 05:33 am

நான் சென்றது சமாதானம் செய்ய சிங்கள சகோதரர்கள் எனக்கும் கூச்சலிட்டு நீர் ஊற்றிவிட்டார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் 13ம் திகதிகளில் நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து பலர் கைது செய்யப்பட்டனர்.

13ம் திகதி ஹெட்டிபொல பொலிஸில் நிலையத்தில் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுதலை செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வருகை தந்த வேலை அந்த இடத்தில் நாமல் குமார இருக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து தயாசிறி ஜயசேகர வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவதற்காக குறித்த இடத்திற்கு விரைந்ததாக செய்திகள் வெளியாகியது. இதனை தெளிவுபடுத்தும் முகமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று (14) ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கியதாக கூறப்படுகிறது, நான் அந்த இடத்திற்கு சென்றது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு கூடியிருந்த மக்கள் எவரும் தான் கூறியதை செவிமடுக்கவில்லை என தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

KK