முதலமைச்சர்களின் பங்களிபை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி - Lanka News Web (LNW)

முதலமைச்சர்களின் பங்களிபை எதிர்ப்பார்க்கும் ஜனாதிபதி

மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனைத்து ஆளுநர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக உரியவாறு பாதுகாப்பு குழுக்களை ஒன்று திரட்டி தத்தமது பிரதேசங்களின் பாதுகாப்பையும் அமைதியை பேணவும் பாதுகாப்புத் துறையினருடன் ஒன்றிணைந்து தேவையான தீர்மானங்களையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காலி மாவட்ட பாதுகாப்புக் குழு கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டினுள் அமைதியை பேணுவதற்கு மாகாண ரீதியில் அமுல்படுத்த வேண்டிய விசேட வேலைத்திட்டமொன்றின் தேவை குறித்தும் ஜனாதிபதி  இதன்போது தெளிவுபடுத்தினார்.

பொலிசார், முப்படையினர், அரசியல் தலைமைகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரையும் இந்த வேலைத்திட்டத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அனைத்து இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் சகவாழ்வையும் உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால செயற்திட்டத்தின் தேவையையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிரதேச ரீதியாக ஏற்பட்டுள்ள வன்முறை சூழலை தவிர்ப்பதற்கு இவ்வாறு பாதுகாப்பு குழு கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டதிட்டங்களை அமுல்படுத்துதல் மிக முக்கியமானதென தெரிவித்த ஜனாதிபதி, பாதுகாப்பு வழங்க வேண்டிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் நுட்பமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய இடங்கள் தொடர்பில் சரியான புரிந்துணர்வு அந்த சமூகத்துடன் செயற்படுபவர்களுக்கே அதிகம் என்பதினால் உரிய வகையில் பாதுகாப்பு குழுக்களை உரியவாறு ஒன்றுகூடி தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி மேலும் தெளிவுபடுத்தினார்.

 

சமீபத்திய செய்திகள்

மே 19, 2019

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்…

மே 19, 2019

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே,…

மே 19, 2019

எமி ஜாக்சன் photo Gallery

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை - மஹிந்த

மே 19, 2019

இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது போர்க் குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை...

மே 18 நினைவேந்தலை முன்னிட்டு, அங்கஜன் எம்.பி யினால் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் முன்னெடுப்பு

மே 19, 2019

யாழ் மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில், தெரிவு செய்யப்பட்ட 144 பேரில்...

இலங்கை உள்நாட்டுப் போர்: தெரீசா மே, ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை

மே 19, 2019

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா...

எமி ஜாக்சன் photo Gallery

மே 19, 2019

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Connect with Us

fb twitter youtube g ins in

Outbound wb