மதுமாதவவிடம் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றையேனும் பதியவில்லை

மதுமாதவவிடம் பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றையேனும் பதியவில்லை

16 May 2019 04:11 am


பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் மதுமாதவ அரவிந்தவிடம் பொலிஸார் வாக்கு மூலங்கள் எதனையும் பதியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மினுவன்கொட பொலிஸ் நிலையத்திற்கு மதுமாதவ அரவிந்த அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவரிடம் வாக்கு மூலம் ஒன்றையேனும் பதிவு செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மணித்தியாலங்கள் காத்திருந்த போதிலும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையான வேலைப்பளுவில் இருந்த காரணத்தினால், வாக்கு மூலம் பதியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்மை இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.