சஹ்ரானின் மனைவி, பிள்ளை சீ.ஐ.டியின் பொறுப்பில்
Monday, 25 May 2020

சஹ்ரானின் மனைவி, பிள்ளை சீ.ஐ.டியின் பொறுப்பில்

16 May 2019 04:17 am


ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இந்த இருவரையும் பொறுப்பேற்றுக் கொள்ள எவரும் முன்வராத காரணத்தினால் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த 26ம் திகதி இஸ்லாமிய தீவிரவாதிகள் வீடொன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திக் கொண்ட போது அந்த இடத்திலிருந்து காயங்களுடன் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாதீமா மற்றும் அவரது மகள் ஆகியோர் மீட்கப்பட்டிருந்தனர்.

இந்த இருவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.