ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது
Monday, 25 May 2020

ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

16 May 2019 04:26 am

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரரினால் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனைக்கு கூட்டு எதிர்க்கட்சியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரையில் கையொப்பமிட்டுள்ளனர்.

எனினும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சில பிழைகள் காணப்படுவதாகவும் இதனால் நாடாளுமன்றிற்கு இதனை சமர்ப்பிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச ஆகியோர் ஆலோசனை வழங்கியுள்னளர்.