எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட பிணை-முறையிட்ட OIC

எதிர்ப்புக்கு மத்தியில் வழங்கப்பட்ட பிணை-முறையிட்ட OIC

16 May 2019 06:02 am

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளில் மொஹமட் ரிப்ராகிம் இன்ஸாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டியவில் உள்ள செப்பு தொழிற்சாலையில் பணியாற்றிய சேவகர்கள் 9 பேருக்கும் பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பிணை வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சுமத்தப்பட்டு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹெவாவிதானவால் நீதி சேவைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அளித்த புகாரில், குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 10பேரும், கடந்த மே 6ம் திகதி அலுத்கடை இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில், பியந்த லியனகே நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்ததாகவும், நீதவான் பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியில் அவர்களுக்கு பிணை வழங்கியதாகவும், இதன் காரணமாக தான் உள்ளடங்கலாக அதிகாரிகள் சிலருக்கு எதிராக பொலிஸ் தலைமை அலுவலகத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு பொலிஸார் கடுமையான எதிர்ப்பை வழங்கியதாக பிரதிவாதி சார்பாக முன்னிலையாகிய வழக்கறிஞர் வாக்குமூலம் அளித்து உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்த வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு நீதி சேவைகள் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

KK