இன்றே விரையுங்கள்! நாளையுடன் வழியில்லை!
Monday, 25 May 2020

இன்றே விரையுங்கள்! நாளையுடன் வழியில்லை!

16 May 2019 07:10 am

புனித விசாக பூரணை தினம் எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை 17ம் திகதியில் இருந்து நான்கு தினங்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.

இதற்கமைய நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மதுபான சாலைகள் மூடப்படவுள்ளன. குறித்த காலங்களில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கலால் திணைக்களத்தின் ஊடக பேச்சாளரும் கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளருமான கபிலகுமாரசிறி தெரிவிக்கையில் 1,200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

KK