கையை வைத்ததுமே சொதப்பிய ரிஷாத்தின் பிரேரணை
Monday, 25 May 2020

கையை வைத்ததுமே சொதப்பிய ரிஷாத்தின் பிரேரணை

16 May 2019 09:02 am

கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (16) சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு சிறிலங்க சுதந்திர கட்சியின் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த பிரேரணைக்கான ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

குறித்த பிரேரணையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 காரணிகள் காணப்பட்டதுடன், 64 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 2018.05.09 ஆகும். இதற்கமைய குறித்த பிரேரணை பெறுமதியற்றதாகும்.

இதில் என்ன வேடிக்கையான விடயம் என்றால் கையொப்பமிட்ட 64 பேரின் கண்ணுக்கும் இது தெரியாமல் போனதே. இருப்பினும் இதுவும் ஒரு வகையில் நன்மையை அளித்துள்ளது. யார் யாருடைய உண்மையான அரசியல் தன்மை எப்படி என்று நம்மால் பார்வையிட கூடியதாக உள்ளது.

எமக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தூய்மையானவர் என நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பெயரில் குற்றம் இருந்தாலும் அதற்க்கு இனி ஒன்றும் செய்ய இயலாது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை வீசிவிட வேண்டியது தான்.

சிலவேளை இந்த நாட்டின் அரசியல் ஆட்டத்தில் இது தெரிந்தே விடப்பட்ட பிழையாக கூட இருக்கலாம்.

இத்தகைய நாட்டிற்கு சஹ்ரான் தாக்குதல் நடத்தவில்லை என்றால் தான் புதுமை.

KK

letter 04letter 04letter 04letter 04