மஹிந்த தரப்பு வேட்பாளர் ஐ.எஸ் தொடர்பு என்ற சந்தேகத்தில் கைது
Monday, 25 May 2020

மஹிந்த தரப்பு வேட்பாளர் ஐ.எஸ் தொடர்பு என்ற சந்தேகத்தில் கைது

16 May 2019 10:33 am

எதிர்க்கட்சித் தலைவரின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மலர்மொட்டு சின்னத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் ஐ.எஸ். தீவிரவாதத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம். இசாட் எம். ரிஸ்வான் என்ற கோடீஸ்வர வர்த்தகரும், மலர்மொட்டு வேட்பாளருமே இவ்வாறு புலானய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொண்டவர்களுடன் மிக நெருங்கிய தொடர்புகளை குறித்த நபர் பேணியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வத்தளை மாபொல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரிடமிருந்து ஜெர்மனியில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் தோட்டாக்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த சந்தேக நபரிடம் அவருடைய புகைப்படத்திலான இரண்டு வெவ்வேறு பெயர்களை உடைய கடவுச்சீட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி குறித்த நபர் டுபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.