அரசியல்வாதிகளின் கண்ணாம்பூச்சி விளையாட்டுகள் வெட்கப்படும் வகையிலானது
Monday, 25 May 2020

அரசியல்வாதிகளின் கண்ணாம்பூச்சி விளையாட்டுகள் வெட்கப்படும் வகையிலானது

16 May 2019 01:58 pm

அரசியல்வாதிகளின் கண்ணாம்பூச்சி விளையாட்டுகள் வெட்கப்படும் வகையிலானது என மின்வலு எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைதியை நிலைநாட்டப்பட வேண்டிய சந்தர்ப்பத்தில் சில அரசியல்வாதிகள் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுகவீனமுற்றிருக்கும் கொட்டுவேகொட தம்மாவாச தேரரை பார்வையிடச் சென்ற போது ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மோதல்களை தூண்டும் வகையில் செயற்படுவது நாட்டை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டைப் பற்றி நினைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.