நட்டஈடு வழங்குவதனை அரசியல் பிரச்சாரமாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
Monday, 25 May 2020

நட்டஈடு வழங்குவதனை அரசியல் பிரச்சாரமாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

16 May 2019 02:04 pm


நட்டஈடு வழங்குவதனை அரசியல் பிரச்சாரமாக்க சிலர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்றைய தினம் நட்டஈடு வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறான நட்டஈடு வழங்கும் நிகழ்வினை ஊடகங்களைக் கொண்டு பிரச்சாரம் செய்தல் இழிவான செயல் என நட்டஈடு பெற்றுக்கொள்ள வந்த நபர்களில் சிலர் குற்றம் சுமத்தி அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.